fbpx

அதிகளவு உடற்பயிற்சி..!! காதில் ரத்தம்..!! ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை அண்ணா நகர் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மகாதீர் முகமது (36). இவர், குகை ஆற்றோர வடக்கு தெருவில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.17) மாலை சுமார் 7 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார். அவருடன் உடற்பயிற்சி செய்த பிறர் வீட்டிற்கு சென்ற நிலையில், முகமது மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, உடற்பயிற்சி நிலையத்தில் நீராவி குளியல் எடுத்துள்ளார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் அவரது தாய் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது அழைப்பை முகமது ஏற்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜிம்முக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் நீராவி குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால், கண்ணாடியால் செய்யப்பட்ட குளியல் அறையை உடைத்து, முகமதுவை மீட்டனர்.

அப்போது, அவரது காதில் ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் ஜிம்மில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மகாதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளதும், அளவுக்கு அதிகமாக அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஜிம்மிற்கு செல்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இந்த வகை பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை..!! இனி சாலைகளில் ஓட்ட முடியாது..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..?

English Summary

The tragic death of a gym owner in Salem after exercising excessively has caused widespread concern.

Chella

Next Post

அம்மாடியோ.. எகிறி அடிக்கும் பூண்டு விலை.. ஒரு கிலோ ரூ. 450-க்கு விற்பனை..!! இல்லத்தரசிகள் ஷாக்..

Tue Nov 19 , 2024
Farmers are complaining that vegetables, flowers, onions etc. are rotting due to stagnant water in agricultural lands.

You May Like