fbpx

’எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தனி பட்ஜெட்’..!! ’ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளன. பாஜகவும், காங்கிரஸும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், பிற கட்சிகளும் தங்களது பிரச்சார தேதிகளை அறிவிக்க தொடங்கிவிட்டன.

இப்படி, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் வென்றால், மக்களுக்கு என்ன செய்வோம் என்பது குறித்து கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு என அடுத்தடுத்து பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் :

* I.N.D.I.A கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

* 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியல் சாசன திருத்த சட்டம் இயற்றப்படும்.

* சாதிவாரி கணக்கெடுப்பு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும்.

* இளைஞர்களுக்கான ஸ்டார்ட்அப் திட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* விவசாயப் பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

* விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச வருவாய் சட்டம் கொண்டுவரப்படும்.

* பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

Read More : வேட்பாளர்கள் கவனத்திற்கு..!! 5 பேருக்கு மட்டுமே அனுமதி..!! 2 வாகனங்கள் மட்டுமே செல்லலாம்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Chella

Next Post

Kids: எச்சரிக்கை!… குழந்தைகளை குறிவைத்த கஞ்சா சாக்லெட் கும்பல்!… மூட்டை மூட்டையாக பறிமுதல்!

Wed Mar 20 , 2024
Kids: ஐதராபாத்தில் குழந்தைகளை குறிவைத்து கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், கடைகளில் விற்பனை செய்வதும் போலீசாருக்கு ரகசிய தகவல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு […]

You May Like