வேட்பாளர்கள் கவனத்திற்கு..!! 5 பேருக்கு மட்டுமே அனுமதி..!! 2 வாகனங்கள் மட்டுமே செல்லலாம்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அஞ்சல் வழியாக வாக்களிப்பதற்கு மார்ச் 25ஆம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தண்ணீர் பஞ்சத்தில் திண்டாடும் Bangalore!… அடுத்த ஆண்டும் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காது!… பரிதவிக்கும் மக்கள்!

Chella

Next Post

Sparrow: கீச்… கீச்!… ஏய் குருவி… சிட்டுக்குருவி!… இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்!

Wed Mar 20 , 2024
Sparrow: இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் கருவி என்றொரு பறவை இருக்கிறது என்றால் தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்க முடியும். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் கிராமங்களில் சிட்டுக் குருவிகள் இன்னமும் இருப்பதே ஆகும். ஆனால் சென்னை கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டுக் குருவிகளின் கோட்டையாகவே இருந்தது என்பது இப்போது வெறும் வரலாற்று பதிவாகிவிட்டது. அப்போதெல்லாம் சிட்டுக் குருவியின் […]

You May Like