fbpx

பரபரப்பு..!! அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!! ஜி ஸ்கொயர் நிறுவனத்திலும் ரெய்டு..?

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், காலை முதலே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய பத்து இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாகவும், சென்னை அண்ணாநகர், எழும்பூர், நீலாங்கரை, அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளின் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது என்றும் சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய இடங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Read More : இன்று வெளியாகிறது அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்..!! தேர்தல் அறிக்கையும் வெளியீடு..?

Chella

Next Post

Gifts: வாக்காளர்களுக்கு சேலை, பணம்..‌! பறக்கும் படைகள் அமைத்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!

Thu Mar 21 , 2024
வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), புதுதில்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி, சென்னை ஜிஎஸ்டி மண்டலம், ஒவ்வொரு ஆணையரகத்திலும் போதிய […]

You May Like