fbpx

இன்று முதல் காலாவதியான அரசுப் பேருந்துகள் நிறுத்தம்..!! கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிர்ச்சி..!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் இன்று (மே 1) முதல் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக பயன்பாட்டு வாகனங்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் சாலை போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு வந்த 130 பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு தற்போது 50 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் குமுளிக்கு இயக்கப்படும் பேருந்துகளும், புதுச்சேரி காரைக்கால் மற்றும் காரைக்கால் கோவை இடையே இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் நிறுத்தப்படுகின்றன. 15 ஆண்டுகள் கடந்த பழைய பேருந்துகள் இன்று முதல் நிறுத்தப்படுவதால் கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Chella

Next Post

அட கடவுளே...! திடீரென ஏற்பட்ட வாயு கசிவு..‌ குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...!

Mon May 1 , 2023
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக லூதியானா காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய பேரிடர் […]

You May Like