ஈரான் நாட்டின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் பந்தர் அப்பாஸ். இது துறைமுக நகரம் என்று அழைக்கப்படும். இங்கு ஈரானின் முன்னணி கொள்கலன் துறைமுகமான ஷாஹித் ராஜீ துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று மதியம் ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் குறைந்தது 406 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளான்.
வெடி விபத்து நடந்த நேரத்தில் பல துறைமுக ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக இறப்புகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ள்ளனர். மேலும் “ஷாஹித் ராஜீ துறைமுக வார்ஃப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல கொள்கலன்கள் வெடித்ததே இந்த விபத்திற்கு காரணம் என்றும், காயமடைந்தவர்களை நாங்கள் தற்போது வெளியேற்றி மருத்துவ மையங்களுக்கு மாற்றுகிறோம்” என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்கும் பனி நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் போது பல கிலோமீட்டர் சுற்றளவில் ஜன்னல்களை உடைத்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன, மேலும் வெடிப்பைத் தொடர்ந்து கரு மேகம் உருவாகுவதைக் காட்டும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
BREAKING | A massive explosion has been reported at the Port of Shahid Rajaee, one of two sections within the Port of Bandar Abbas, located on the north shore of the Strait of Hormuz in southern Iran.
— The Cradle (@TheCradleMedia) April 26, 2025
According to Mehr News Agency, a fuel tank in the port exploded due to unknown… pic.twitter.com/vN8r4yHyCT
ஓமனில் அமெரிக்காவுடன் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் தொடங்கியபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டில், கணினிகள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டன, இதனால் நீர்வழிகள் மற்றும் அந்த நிலையத்திற்கு செல்லும் சாலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த சம்பத்தின் பின்னணியில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.