fbpx

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! தீயில் கருகி 9 பேர் பரிதாப பலி..!! நடந்தது என்ன..?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையில், வழக்கம் போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த வேம்பு என்கிற தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சிவகாசி அருகே உள்ள M. புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கடையில் இருந்தவர் எத்தனை பேர், வேறு யாரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்களா? உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட பின்னரே முழுமையான விவரங்களை கூற முடியும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

Chella

Next Post

எந்தெந்த நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்..? லிஸ்ட் இதோ..!! அட இந்த நாட்டிலுமா..?

Tue Oct 17 , 2023
34 நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், முன்னதாகவே பல நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கூபா, கோஸ்டரிகா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், பெல்ஜியம், அன்டோரா, பிரிட்டன், லக்சம்பர்க், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, […]

You May Like