விஜயகாந்தின் உடல்நிலையில் தொய்வு..! பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி தகவல்..!

விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரௌபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதாவிடம், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Tamil Nadu: Actor Vijayakanth's DMDK walks out of AIADMK-BJP alliance as  seat-sharing talks fail | Mint

அதற்கு பதிலளித்த அவர், ”விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”ஒரு பெண் வேட்பாளராக திரெளபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். அவர் வெற்றி பெறுவது உறுதி.

Is Vijayakanth under pressure from his party for an alliance with DMK? |  The News Minute

தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. தமிழ் கடவுள் முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான். வெற்றி பெற்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்வேன் என திரெளபதி என்னிடம் தெரிவித்தார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை என்றும் இருவரில் யார் வெற்றி பெற போகிறார், என்ன முடிவு ஆக போகிறது என்பதை காண காத்திருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

Chella

Next Post

அடுத்த ’ஸ்கெட்ச்’ போடும் எடப்பாடி பழனிசாமி..! அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..!

Sun Jul 3 , 2022
பொதுக்குழு தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி, பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11ஆம் தேதி […]

You May Like