fbpx

ஏற்றுமதி-இறக்குமதி..!! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! தமிழக அரசு அதிரடி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஏற்றுமதியாளராக வேண்டும் என்ற கனவுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அற்புத வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. எனவே, ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் வரும் 31ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை (3 நாட்கள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

ஏற்றுமதி

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Chella

Next Post

அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!! பணிந்தது இலங்கை..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

Wed Oct 26 , 2022
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 12’ சுற்றில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பத்தும் […]
அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!! பணிந்தது இலங்கை..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

You May Like