fbpx

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ..!

பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்க உள்ளார். 

பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பிரதம மந்திரி இளைஞர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். உயர் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உடன் சான்றிதழும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.

எனினும் இது 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொறியியல் & தொழில்நுட்பம், கட்டிடக்கலை ஆசிரியர்கள் முதல் பிரிவாகவும், கணிதம், இயற்பியல், உயிரியல், ரசாயன அறிவியல், மருத்துவம், மருந்தகம்  உள்ளிட்ட முழுமையான அறிவியல் பிரிவு ஆசிரியர்களுக்கு (Pure Sciences) இரண்டாவது பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவின்கீழ், கலை மற்றும் சமூக அறிவியல், மனிதநேயம், மொழிகள், சட்ட ஆய்வுகள், வணிகம், மேலாண்மை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் nat.aicte-india.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில், முன்பதிவு பகுதியில், எந்த கல்வி, பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, முன்பதிவு செய்ய வேண்டும். விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று படிப்படியாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/User_Manual_NTA.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.  

தங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் குறித்த 800 வார்த்தைகள் அடங்கிய ஆவணத்தையும் ஆசிரியர்கள் இணைக்க வேண்டும். முன்னதாக இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசித் தேதியாக இருந்தது. ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

தமிழக மக்களே இன்றும் நாளையும் வீட்டுக்குள்ளேயே இருங்கள்…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Thu Aug 3 , 2023
தமிழகத்தில் இந்த வருடம் முழுவதும் மழைக்காலம் போலவே சென்று கொண்டிருக்கிறது. தற்போது பருவ மழை காலம் கொஞ்சம், கொஞ்சமாக நெருங்கி வருகிறது. அண்டை மாநிலங்களில் பருவமழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. ஆனால் கத்தரி வெயில் அடிக்கும் சித்திரை மாதத்தில் கூட வெயிலின் தாக்கம் குறைந்து, மழையின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்த நிலையில் தான், வானிலை ஆய்வு மையம் […]

You May Like