2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள் 2023, மே1 அன்று தொடங்கப்பட்டது. பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2023 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருதுகள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெறப்படும்.
பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்து துறைகள், துறைகளில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.
இது தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் (https://mha.gov.in) என்ற இணையதளத்திலும், பத்ம விருதுகள் (https://padmaawards.gov.in) என்ற இணையதளத்திலும் ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.