fbpx

இந்தியாவில் 5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்…! கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு…!

5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செப்டம்பர் 29 தேதியிட்ட “5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த ஆலோசனை அறிக்கை குறித்து பங்கெடுப்பாளர்களின் கருத்துகள், எதிர் கருத்துகளை கோரியது. பங்கெடுப்பாளர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே அக்டோபர் 30, நவம்பர் 13 என அறிவிக்கப்பட்டது.

பண்டிகைகள் காரணமாக அத்தியாவசிய தகவல்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் போன்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தொழில் சங்கங்களிடமிருந்து டிராய்க்கு கோரிக்கைகள் வந்துள்ளன. ஆலோசனைக் கட்டுரைக்கு பதிலளிப்பதற்கு முன்பு உள்நாட்டில் விரிவான விவாதங்கள் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பங்கெடுப்பாளர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வமான கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நவம்பர் 27 வரையிலும், எதிர் கருத்துகளை டிசம்பர் 11ம் தேதி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்கெடுப்பாளர்கள் தங்களது கருத்துகளை மின்னணு வடிவில் advadmn@trai.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ராகு கேது பெயர்ச்சி..!! இந்த 4 ராசிக்காரர்களுக்கும் இனி ராஜயோகம் தான்..!! பணம் கொட்ட போகுது..!!

Tue Oct 31 , 2023
ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டன. 18 மாதங்கள் இந்த கிரகங்கள் பல ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷம் : ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. யோசிக்கவே வேண்டாம் தலைமேல் அமர்ந்திருந்த ராகு விலகி விட்டார். இனி நினைத்த […]

You May Like