fbpx

Chennai Train : மகிழ்ச்சி செய்தி…! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு‌…! முழு விவரம் இதோ

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வோருக்கு வசதியாக சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 5 ரயில்கள், சென்னை கடற்கரை – கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 26-ம் தேதி முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் தாம்பரம் வரை செல்லும் ரயில்கள், கூடுவாஞ்சேரி வரையும் 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் மறு மார்க்கமாக புறப்பட்டு சென்னை கடற்கரையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல; பயணிகள் தேவைக்காக மாநகர பேருந்துகளை நாளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தெற்கு ரயில்வே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

English Summary : Extension of train service for commuters to kilambakkam

Vignesh

Next Post

Modi: மார்ச்.4ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!… பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக தகவல்!

Sun Feb 25 , 2024
Modi: மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி சென்னை வரவுள்ளது உறுதியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் அடிக்கடி கூறி வருகிறார். வட மாநிலங்களில் இமாலய […]

You May Like