மதுரையில் செயல்பட்டு வரும் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் தரவு பதிவு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இளங்கலை அறிவியல் வேளாண்மை அல்லது தோட்டக்கலை முடித்து வெளிநாட்டு வர்த்தகம் அல்லது உலகளாவிய வர்த்தகம் போன்றவற்றில் முதுநிலை வணிக நிர்வாகம் அல்லது வேளாண் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும், வேளாண் ஏற்றுமதி அல்லது வேளாண் வணிக மேம்பாட்டுத் திட்டங்களை நிர்வகிப்பதில் 5-10 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தரவு பதிவு அலுவலர் (Data Entry Operator) பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் கணினி அறிவியியல் இளங்கலைப்பட்டம் அல்லது கணினி பயன்பாடுகளில் இளங்கலைப்பட்டம் பெற்று இரண்டு வருட வேலை அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் 11.07.2022 மாலை 3.00 மணிக்குள் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சிப்பெட் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கோ அல்லது ceotansamb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவத்திற்கான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.