’பெண்கள் அழகாக இருந்தால் கூடுதல் சம்பளம்’..! சர்ச்சையில் சிக்கிய திமுக எம்எல்ஏ..!

பெண்கள் அழகாக இருந்தால் கம்பெனியில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி, வேடசந்தூர் எம்.எம்.ஏ. காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பேசிய எம்எல்ஏ காந்திராஜன், பெண்கள் அழகாக இருந்தால் கம்பெனியில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாஜி துணை சபா. காந்திராஜனை முன்வைத்து திண்டுக்கல் திமுக தலைகளின்  கேம்-கிறுகிறுக்கும் தொண்டர்கள் | DMK Cadres confuse over Party Seniors  stand on Vedasandur Candidate ...

இதுகுறித்து அவர் பேசுகையில், ”தற்போதுள்ள மல்டிநேசனல் கம்பெனிகளில் வேலைவாய்ப்பு கொடுப்பது எப்படியென்றால், நீங்கள் வாங்கியிருக்கும் மார்க்கையெல்லாம் பெரும்பாலும் பார்ப்பதில்லை. உங்களின் கல்வித்தகுதி, எந்த துறையில் ஆர்வம், என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை பார்த்தாலும், பிரதானமாக உங்களிடம் எதிர்பார்ப்பது ஆங்கில புலமையைத்தான். உங்களிடத்தில் ஆங்கில புலமை இருக்கிறதா? ஆங்கிலத்தில் பேசும் அறிவு இருக்கிறதா? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்கள். தெளிவாக விரைவாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா? என்பதைத்தான் மல்டிநேசனல் கம்பெனிகள் பார்க்கின்றன. சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை இருந்தால்தான் அதிகமான சம்பளம் கிடைக்கும், மல்டிநேசனல் கம்பெனியில் வேலை கிடைக்கும். பெண்களாக இருந்தால் அழகாக இருக்க வேண்டும் என்று கம்பெனிகாரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

ஜூலை 11இல் அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை..! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்..!

Sun Jul 3 , 2022
தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையது அல்ல என்றும் எத்தனை ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை. கடந்த பொதுக்குழுவில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமல், 23 தீர்மானங்களுக்கு மேல் எந்த […]
பொதுக்குழு வழக்கு..! அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு..!

You May Like