fbpx

பொங்கலுக்கு அசத்தல் அறிவிப்பு…! பத்திர பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…! முழு விவரம்…

தைப்பொங்கலை முன்னிட்டு 18.01.2024 முதல் 31.01.2024 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தைப்பொங்கலை (15.1.2024) அடுத்து வரும் நாட்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18.01.2024 முதல் 31.01.2024 வரையிலான அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் ஒரே பாலின நண்பருடன் திருமணம்..! வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள்..!

Fri Jan 12 , 2024
Chat gpt எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரபல OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், Y Combinator இன் முன்னாள் தலைவருமான சாம் ஆல்ட்மேன், ஹவாயில் நடைபெற்ற அந்தரங்க விழாவில் தனது கூட்டாளியான Oliver Mulherin உடன் திருமணம் செய்து கொண்டார். அவரது அந்த திருமண […]

You May Like