அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஷெல் உட்லான் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசியர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் உண்மை வெளிச்சந்துக்கு வந்தது. அதன்படி, கடந்த 2 நாட்களில் மட்டும் மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆசிரியைகள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள டான்வில்லியைச் சேர்ந்த 38 வயதான எலன் ஷெல் என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 16 வயதுள்ள இரண்டு சிறுவர்களை 3 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், ஆர்கன்சாஸ் பெண் கல்வியாளர் ஹீதர் ஹேர் (32). இவர் ஒரு மாணவரை கட்டாயப்படுத்தி உடலுறவில் இருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓக்லஹோமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக் (26) என்பவர் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டார். இவரும் பள்ளியில் இருக்கும் மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, லிங்கன் கவுண்டியில் உள்ள ஒரு ஆசிரியை 15 வயது மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். வெல்ஸ்டன் பப்ளிக் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை எம்மா டெலானி ஹான்காக் பள்ளி வளாகத்திலேயே மாணவர் ஒருவரை பலாத்காரம் செய்துள்ள புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியரான கிறிஸ்டன் காண்ட் (26), ஒரு மாணவரை 5 முறை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.