முதலமைச்சர் முக.ஸ்டாலினின் அண்ணனான முக.அழகிரி, மத்திய அமைச்சராக இருந்துள்ளார். ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கிறார். இவரது மகன் துரை தயாநிதி, தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர் பல ஹிட் படங்களை தயாரித்தும், வெளியிடவும் செய்துள்ளார். கடந்தாண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில், தலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் 4 மாதங்கள் வரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள ஏ-பிளாக்கில் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆகஸ்ட் 10) மிரட்டல் மெயில் ஒன்று வந்துள்ளது.
அதில், துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் தொடர்பாக எச்சரிக்கை இருந்துள்ளது. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மின்னஞ்சலில் வந்த முகவரி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் ஏ பிளாக்கில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More : வினேஷ் போகத்துக்கு பதக்கம்..? இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம்..!!