fbpx

தோல்வி அடைந்த பிரின்ஸ் படம்! ரூ.3 கோடி நஷ்ட ஈடு வழங்கினார் எஸ்.கே!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்காவும், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லை. தமிழகத்தில் விநியோகஸ்தருக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளார். அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரூ.3 கோடி, சிவகார்த்திகேயன் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.6 கோடி விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kokila

Next Post

பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாமல் சிரமப்படும் எம்.எஸ் தோனி...! வைரலாகும் காணொளி...

Wed Jan 4 , 2023
கிரிக்கெட் உலகமே தல தோனியின் ரசிகர்களாக இருக்கும் நிலையில், அவரோ வாகனங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டவராக இருக்கின்றார். எம்எஸ் தோனிக்கு பைக்குகள் மற்றும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதற்கு அவரிடத்தில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையே சான்றாகும். எக்கசக்கமான வாகனங்கள் அவரிடத்தில் உள்ளன. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு தனி அறையே வைத்துள்ளாராம். உதாரணமாக நிஸான் ஜுங்கா போன்ற அரிய வகை கார்கள் அவரிடத்தில் […]

You May Like