fbpx

முதலில் தமிழகத்தை காப்பாற்றுங்கள்!… பிறகு இந்தியாவை பாருங்கள்!… ஸ்டாலினுக்கு பிரேமலதா பதிலடி!

Premalatha: முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே. பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி ஆதரித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கேப்டன் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றிணைந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு தங்கள் வீட்டில் ஒருவராக கேப்டனை நினைத்து கண்ணீர் வடித்தீர்கள். எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். எந்த ஆட்சியாளர்களும் தொலைநோக்கு பார்வையில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை மக்களுக்காக எங்களுடைய வேட்பாளர் கண்டிப்பாக உழைப்பார்.

மாநிலத்தில் ஆளும் திமுகவும், மத்தியில ஆளும் பாஜகவும் மக்களுக்கான திட்டங்களை எதையும் செய்யவில்லை. திமுகவில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலில் நிறைவேற்றாமல் இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் சொல்லி வருகிறார். முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே. பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என பதிலடி கொடுத்தார்.

ஒட்டுமொத்த மக்களே இந்த கூட்டணியை கொண்டாடுகிறார்கள். மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் போற்றும் கூட்டணியாக இது அமைந்துள்ளது. 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைய இந்த கூட்டணியை மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்க வேண்டும்.

Readmore: உஷார் மக்களே.. மருத்துவமனை சின்கில் பரவும் பாக்டீரியா!

Kokila

Next Post

இன்றுமுதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி!… 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

Fri Apr 12 , 2024
Exam: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுமுதல் தொடங்க உள்ளது. தில் சுமார் 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுமார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு […]

You May Like