fbpx

நீட் தேர்வில் தோல்வி..! உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..! தொடரும் சோகம்..!

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இளங்கலை மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 18 லட்சத்து 72ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வு 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதிய நிலையில், 67787  தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வி..! உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..! தொடரும் சோகம்..!

தமிழகத்தில் நீட் தேர்வின்போது தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீட் தோல்வி பயம் காரணமாக மாணவ மாணவிகள் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியான, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துவந்த நிலையில், ஸ்வேதா இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத காரணத்தினால், ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

’சைரஸ் மிஸ்திரியின் கார் விபத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்’..! தடயவியல் குழு பகீர் அறிக்கை..!

Thu Sep 8 , 2022
மேம்பாலத்தின் தவறான வடிவமைப்பும் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்ததற்கான முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மதியம் 3 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவரது கார் அதிவேகமாக சென்ற நிலையில், மற்றொரு காரை முந்த முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவரில் […]
’சைரஸ் மிஸ்திரியின் கார் விபத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்’..! தடயவியல் குழு பகீர் அறிக்கை..!

You May Like