fbpx

நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கூடுதல் சமுதாய சேவைகள் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்ட முடியும்…!

நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்ற சேவைகளை அளிப்பதன் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்டி வருவதாக நியாயவிலைக் கடைகளின் மாற்றத்திற்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய அவர், பொது விநியோக சேவை நடவடிக்கைகளுக்கு அப்பால், மற்றப் பொருட்களை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன் மூலம் துடிப்புமிக்க, நவீனமான, சாத்தியமிக்க நியாயவிலைக் கடைகளாக மாற்றுமாறு அவர் வலியுறுத்தினார். விரைவில் விற்பனையாகக் கூடிய மற்றப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நியாயவிலைக் கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆதார் அங்கீகாரம் மூலம் நாட்டில் எந்தவொரு நியாயவிலைக் கடைகளிலும் பயனாளிகள் உணவு தானியங்களை தற்போது பெறமுடிவது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முன்னெடுப்பின்கீழ், நாடு முழுவதும் 3.5 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 மாதிரி நியாயவிலைக் கடைகளை மாநில அரசுகள் கண்டறிந்து, அங்கு காத்திருப்பு இடங்கள், கண்காணிப்பு கேமராக்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தருமாறு சோப்ரா கேட்டுக்கொண்டார்.

Vignesh

Next Post

இந்திய வீரர் பிருத்வி ஷாவின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..!! பரபர சம்பவம்..!! நடந்தது என்ன..?

Fri Feb 17 , 2023
செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட விளையாட்டு, கிரிக்கெட் எனலாம். இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களை காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகம். அதனால்தான் கிரிக்கெட் வீரர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவர்களை சுற்றிவளைத்து விடுவார்கள். அப்படி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு […]

You May Like