கள்ளக்காதலை திடீரென நிறுத்திய பெண்..!! முன்கூட்டியே எச்சரித்த கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள பவானி நகரில் வசித்து வந்த சுனில் குமார் என்ற பள்ளி ஆசிரியரையும், அவருடைய மனைவி பூனம், 2 மற்றும் 6 வயதில் உள்ள இரண்டு மகள்கள் என 4 பேரும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


அதாவது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுனில் குமாரின் குடும்பத்தினரை சந்தன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், அந்த குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். “சந்தன் தன்னை மிரட்டுவதாகவும், தங்கள் குடும்பத்தினருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு சந்தன் தான் பொறுப்பு என்றும் சுனில் குமாரின் மனைவி பூனம் பார்தி கடந்த 2 மாதங்களுக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதற்கு காரணம், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு தனது கணவருடன் பூனம் சென்றிருக்கிறார். அப்போது பூனம் பார்தியிடம் சந்தன் வர்மா தவறாக நடந்து கொண்டார். அப்போது, சந்தன் பூனத்தையும் அவரது கணவரையும் அறைந்ததாகவும், இதைப் பற்றி போலீசில் புகார் சொன்னால் உன் குடும்பத்தைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் பூனம் கூறியதைத் தொடர்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “கடந்த 2 வருடங்களாக பூனத்துடன் கள்ள உறவு இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ள உறவை பூனம் தொடர மறுத்ததால் குடும்பத்தோடு கொலைச் செய்வதாக மிரட்டிப் பார்த்தும் பூனம் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் குடும்பத்தோடு கொலைச் செய்தேன்” என்று சந்தன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறது தெரியுமா..? அடடே இவ்வளவு விஷயம் இருக்கா..?

English Summary

As Poonam refused to continue the fake relationship, Poonam did not agree even after threatening to kill her family. Due to this, I killed my family in a fit of rage

Chella

Next Post

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி உல்லாசம்..!! திடீரென தடையாக வந்த தாலிக்கட்டிய கணவன்..!! பக்கா பிளான் போட்டு முடித்த மனைவி..!!

Sun Oct 6 , 2024
Salma doesn't listen to Sadiq. Due to this, the dispute between the couple has continued.

You May Like