fbpx

சித்தியுடன் கள்ள உறவு..!! கடுப்பான அத்தை..!! தடையாக இருந்ததால் குத்திக் கொலை..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

சென்னை கொளத்தூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ் (31). இவர், பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், தனது சித்தியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அவருடனே வசித்து வந்துள்ளார். இதனையறிந்த அவரது அத்தை குணசுந்தரி இதுகுறித்து தட்டிக்கேட்டதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார். அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி தனது அத்தை குணசுந்தரியை கத்தியால் குத்தி கொலை செய்தார் கணேஷ். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் கைது செய்யப்பட்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கணேஷ் அவரது அத்தை குணசுந்தரியை கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Chella

Next Post

’பெண்ணை கட்டி அணைப்பது குற்றமல்ல’..!! ’இது இயல்பானது தான்’..!! நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்..!!

Thu Aug 10 , 2023
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் 2 எப்ஐஆர் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் […]

You May Like