fbpx

கள்ளக்குறிச்சி வன்முறை..! 77 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 77 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை டிராக்டரால் சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்தனர். மேலும் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். இதையடுத்து, சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை..! 77 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு..!

கைதானவர்களில் 236 பேர் ஜாமீன் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையின்போது, ஜாமீன் கோரியவர்களில் முதற்கட்டமாக கல்லூரி மாணவர்கள் 77 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்னிமா உத்தரவிட்டார். நாளை மீண்டும் 100 நபர்களுக்கான ஜாமீன் மீதான விசாரனை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Chella

Next Post

இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

Tue Aug 9 , 2022
இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, வடதமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌ […]

You May Like