fbpx

60 வயது நடிகருடன் பழக்கம்..!! விஜயகாந்த் எடுத்த ஆக்‌ஷன்..!! அதுக்கப்புறம் மூச்சு கூட விடல..!! கஸ்தூரி உருக்கம்..!!

நடிகை கஸ்தூரி மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

விஜயகாந்த் உடன் தான் முதல்முறையாக திரைப்படங்களில் ஒன்றாக நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகரோடு சேர்த்து வைத்து வதந்தி செய்தி பரவிய போது விஜயகாந்த் தனக்காக செய்த உதவி குறித்து நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார். அதில், நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு விஜயகாந்தை அவ்ளோ பிடிக்கும். அவரையெல்லாம் நிஜத்தில் பார்ப்போம் என்று நினைக்கவே இல்லை. அதனாலே அவரோடு சேர்ந்து ஒன்றாக நடிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை.

சினிமா சூட்டிங் ஸ்பாட்டில் அவர் பலருக்கு உதவி செய்வதை நானே பார்த்து இருக்கிறேன். அவரை பார்க்க வருகிறவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று எப்போதும் நினைப்பவர். யாருக்கு எந்த நேரத்தில் உதவி என்றாலும் செய்து விடுவார். இந்த மாதிரி ஒரு சிலருக்கு செய்த உதவிகளை வெளிப்படையாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். ஒரு பெண் நடிகை ஒருவருக்கு பண விஷயத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக தொடர்ச்சியாக ஏழு எட்டு படங்களில் அவருக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

எனக்கும் கூட ஒரு பெரிய உதவியை செய்தார். அதாவது நான் விஜயகாந்த் உடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோது என்னை பற்றி அவருடைய ஆஃபீஸில் இருந்த ஒரு சிலர் 60 வயது நடிகரோடு தவறாக இணைத்து பேசியிருக்கிறார்கள். அந்த செய்தி பரவி வந்தது. அதுமட்டுமின்றி, அந்த செய்தி பத்திரிகைகளிலும் கூட அந்த நேரத்தில் வந்திருந்தது. அது பற்றி விஜயகாந்த்திடம் நான் சொன்னேன். உடனே அவர் இதற்கு மேல் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னார். அதற்கு பிறகு அந்த பேச்சு அடியோடு நிறுத்துவதற்கு காரணமே விஜயகாந்த் தான்.

அந்த மாதிரி யார் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ அதை தைரியமாக அவரிடம் சொல்ல முடியும். சொன்னால் எப்படியும் மறுக்க மாட்டார் என்பது எல்லாருக்குமே தெரியும்” என்று அந்த வீடியோவில் நடிகை கஸ்தூரி உருக்கமாக பேசியிருக்கிறார்.

Chella

Next Post

அடச்சீசீ..! ரயிலில் இளம் பெண் முகத்தில் 47 வயது நபர் செய்த அசிங்கம்.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

Wed Jan 3 , 2024
கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி முன்பு 47 வயது நபர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம் கேரளாவில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்து நடைபெற்று இருக்கிறது. இன்று அதிகாலை இரயில் கர்நாடக மாநிலத்தில் சென்று […]

You May Like