பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் காலமானார்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு.. இவர் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்று அழைக்கப்படுகிறார்.. அதிக ரசிகர்களை கொண்ட தெலுங்கு நடிகர்களில் மகேஷ் பாபு முன்னணியில் இருக்கிறார்.. மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்..
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்திரா தேவி காலமானார்.. அவரின் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரது உடல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அஞ்சலிக்காக பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மகாபிரஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் ரமேஷ் பாபு, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.. இந்த சூழலில் அவரின் தாயார் இன்று காலமானார்.. ஒரே ஆண்டில் மகேஷ் பாபுவின் குடும்பத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த இழப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..