’பாரதி’ என்ற திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. பின்னர், ’பூவெல்லாம் உன் வாசம்’ ’பாபா’ ’தூள்’ ’படிக்காதவன்’ ’வேட்டைக்காரன்’ ’வேலாயுதம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்ததில், இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்..!! ரூ.25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்..!! பெற்றோர்களே நோட் பண்ணுங்க..!!