பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார், சிநேகலதா தீட்சித் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 91..
மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனே இதுகுறித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.. அதில் “எங்கள் அன்பிற்குரிய அம்மா,, சிநேகலதா தீட்சித், இன்று காலை தனது அன்புக்குரியவர்களால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக காலமானார்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.. சிநேகலதா தீட்சித்தின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் சுமார் 3:00 மணியளவில் வொர்லி மயானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது..
மாதுரி தீட்சித் அடிக்கடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.. அந்த வகையில், கடந்த ஆண்டு தனது தாயாரின் பிறந்தநாள் அன்று மாதுரி தீட்சித் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா… நீங்கள் எனக்காகச் செய்த எல்லாவற்றிலிருந்தும், நீங்கள் கற்பித்த பாடங்கள் உங்களிடமிருந்து எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். நான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறேன்..” என்று கூறியிருந்தார்.. இந்நிலையில் தனது தாயை இழந்து வாடும் மாதுரி தீட்சித்துக்கு பல்வேறு பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்..