ஐபிஎல் 2024 முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவாக ஷாருக்கான் அகமதாபாத்தில் இருந்தார். போட்டியின் போது அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இந்தியர்களின் முகமாக உலக அரங்கில் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். ஷாருக்கானுக்கு தற்போது 58 வயதாகிறது. ஐபிஎல் 2024 முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவாக ஷாருக்கான் அகமதாபாத்தில் இருந்தார்.
நேற்றைய தினம் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தப் போட்டியை கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் நேற்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்தார்.
இந்நிலையில் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி சினிமா ரசிகர்களையும், கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக்கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.