பழம்பெரும் கன்னட நடிகர் மந்தீப் ராய் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74
1981-ம் ஆண்டு வெளியான ’மின்சின்னா ஊட்டா’ என்று படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் மந்தீப் ராய்.. அவருக்கு நகைச்சுவை வேடங்களில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்ததால், கன்னட திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.. அவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பென்கியா பல்லே, அகாஷ்மிகா, ஏழு சுதிகா கோட்டே, கீதா, ஆக்ஸிடெண்ட், ஆசேகொபா மீசேகொபா, குஷி உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவரின் டைமிங் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.. மேலும் கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ராஜ்குமார் மற்றும் அனந்த் நாக் போன்றவர்களுடனும் மந்தீப் ராய் நடித்துள்ளார்..
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மாரடைப்பு காரணமாக மந்தீப் ராய் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறிய நிலையி. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.. இந்த சூழலில் நடிகர் மந்தீப் ராய்க்கு இன்று காலை மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.. அவருக்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..