fbpx

கொடைக்கானலில் பாலியல் தொல்லை கொடுத்த பிரபல இயக்குனர்..!! சினிமாவை விட்டே விலகிய மனிஷா யாதவ்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் செய்த மோசமான செயல்களை பற்றி பகிர்ந்து வருகிறார். அதில் அவர் கூறுகையில், “நடிகை மனிஷா யாதவ் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு அந்த இயக்குனர் நடிகைக்கு மிகப்பெரிய பாலியல் டார்ச்சரை கொடுத்துள்ளார்.

அந்த நடிகை கண்ணீர் விட்டு கதறி, அந்த படத்தில் நடிக்கவே முடியாமல் ஒரு வாரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். எனக்கு போன் செய்து அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் என்னிடம் கூறினார். என்கிட்ட ஆதாரம் இருக்கு. அந்த நடிகை கடைசியில் சினிமாவே வேண்டாம்னு போய்ட்டாங்க” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

அவசர சிகிச்சை பிரிவு..!! செயற்கை சுவாசம்..!! விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் சொன்ன தகவல்..!!

Thu Nov 23 , 2023
விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், தேவைப்படும் போது மட்டும் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் […]

You May Like