fbpx

பிரபல மலையாள இசையமைப்பாளர் மாரடைப்பால் காலமானார்… திரையுலகினர் இரங்கல்..

பிரபல மலையாள இசையமைப்பாளர் என்.பி.பிரபாகரன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 75.

மலையாள இசையமைப்பாளர் என்.பி. பிரபாகரன் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.. அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.. ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சொந்த ஊரான திருவஞ்சூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.. அங்கு அவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று பிற்பகல் அவரது உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

என்.பி.பிரபாகரனுக்கு உஷா குமாரி என்ற மனைவியும், ஆனந்த் பிரபு, அனிஷ் பிரபு என்ற மகன்களும் உள்ளனர். என்.பி.பிரபாகரன் கேரள சங்கீத நாடக அகாடமி விருதை பெற்றவர்.. மலையாள் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். யேசுதாஸ், பி ஜெயச்சந்திரன், உன்னி மேனன், சுஜாதா உட்பட பல பிரபல பாடகர்கள் பிரபாகரனின் இசையமைப்பில் பாடியுள்ளனர். என்.பி.பிரபாகரன் கந்தவ ராத்திரி, அழகனந்தா, பூநிலவு, அழகனந்தா, அன்பற அச்சமா, அவள் திரௌபதி, மற்றும் அனுயாத்ரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்..

திரைப்படங்கள் தவிர, பல நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆல்பங்களுக்கும் என்.பி.பிரபாகரன் இசையமைத்துள்ளார். என்.பி.பிரபாகரனும் காலிகட் பல்கலைக்கழகத்தில் பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.. அவரின் மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

விரைவில் முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் இந்த இரு தொடர்கள்…..!

Sun Mar 12 , 2023
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அதே சமயத்தில் சன் டிவி தொடர்கள்தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம், விஜய் டிவியில் முன்னணியில் இருந்து வரும் பாக்கியலட்சுமி தொடரே முதல் 5 இடத்தில் இருப்பது அரிதாகிவிட்டது போட்டியை சமாளிக்க விஜய் டிவி தொடர்ந்து புது புது தொடர்களை களம் இறக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் […]

You May Like