fbpx

“ஹோட்டல் ரூமில் தங்கி….நடிகர் கார்த்திக் செய்த காரியம்; பிரபல தயாரிப்பாளர் அளித்த பரபரப்பு பேட்டி..

பழம்பெரும் நடிகர் ஆர்.முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், 80கள் மற்றும் 90களில் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். அலைகள் ஒய்வதில்லை (1981) என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாரதிராஜாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அந்த காலகட்டத்தில் பிளேபாய் போலவே இருந்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, யூடியூப் சேனலில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்திக் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “நவரச நாயகன் என்ற பட்டம் முழுக்க முழுக்க கார்த்திக்குக்கு மட்டுமே பொருந்தும். அவரை வைத்து, “வாலிபமே வா வா, இளஞ்சோடிகள்” இப்படி பிளேபாய் படங்களே எடுக்கப்பட்டன. தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் மூழ்கி நடிக்கக் கூடியவர் கார்த்திக். எப்போதும் குழந்தைத்தனமாக பேசும் கார்த்திக், உண்மையிலேயே குழந்தை மனசுக்காரர் தான். கார்த்திக் சார், சில தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையானதால் தான், இன்று நாம் ஒரு நல்ல நடிகரை திரையில் பார்க்க முடியவில்லை.

செல்லப்பிள்ளையான அவரை, வசதியாகவே வளர்த்தார்கள். வெயிலில் அவரால் கொஞ்ச நேரம்கூட நிற்க முடியாது. இதில் அவருக்கு மதுப்பழக்கமும் இருந்தது. அரசியல் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள தென்மாவட்டங்களுக்கு போவார். ஓட்டலில் ரூமில் தாங்கும் அவரால் மறுநாள் எழுந்துகொள்ளவே முடியாது. இதனால் மீட்டிங்குக்கும் சரியான நேரத்துக்கு வர முடியாது. ஷூட்டிங்கிலும் சரியான நேரத்துக்கு வரமாட்டார். ஆனால், எந்த தயாரிப்பாளரையும், டைரக்டர்களையும் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கம் கார்த்திக்குக்கு கிடையாது.

அவரின் குடி பழக்கத்தால், அவருக்கே தெரியாமல் செய்யும் தவறுகள் தான் இவையெல்லாம். இதனால் தான் மார்க்கெட்டை இழக்க நேரிட்டது. இவர் திருமணம் செய்தபோது, ஒரு நடிகை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி பல பஞ்சாயத்துகள் அவர் வாழ்கையில் நடந்துள்ளது. ஆனால் யாரும் அவரை திட்டமாட்டார்கள்” என்றார்.

Read more: “விஜயகாந்த் நடிக்கும் படத்தில், நான் நடிக்க மாட்டேன்” பிரபல ஹீரோ சொன்ன காரணம்..

English Summary

famous producer opens up about the downfall of actor karthick

Next Post

மீண்டும் மீண்டுமா.. ஊழியர்களை கதற வைத்த மைக்ரோசாப்ட்.. இந்த டைம் இவர்கள் தான் டார்கெட்..!!

Wed Jan 8 , 2025
Microsoft Eyes More Layoffs, Targeting Underperforming Workers: All We Know So Far

You May Like