fbpx

சாப்பிட ஹோட்டலுக்கு வந்தவருக்கு திடீரென்று விழுந்த அரிவாள் வெட்டு…..! பதறி அடித்து ஓடிய பொதுமக்கள் பரபரப்பான கடற்கரை….!

சென்னை புளியந்தோப்பு அருகே கடற்கரை மணலில் அமர்ந்து, சாப்பிட்டு கொண்டு இருந்த பிரபல ரவுடி ஒருவரை, கண்ணிமைக்கும் நேரத்தில், அங்கு வந்த ஒரு கூலிப்படை கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, சாவகாசமாக நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அதாவது, சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3வது தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ்(44) இவர் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது. மேலும், இவர் மீது, ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத் சிங் ஆகியோர் கொலை வழக்கு, உட்பட, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதோடு, காவல்துறையினர் பல்வேறு வழக்குகளில் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் தான், ஒரு கொலை வழக்கு குறித்து, சுரேஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராவதற்காக வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் ஆஜராவதற்கு சுரேஷின் நண்பரான வழக்கறிஞர் மது என்பவருடன், நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் பின்னர் அந்த வழக்கறிஞருடன், காரில் சென்னை பட்டினப்பாக்கம் இணைப்பு சாலையில் இருக்கின்ற மீனவன் உணவகம் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கரை மணலில் அமர்ந்து, சுரேஷ் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், திடீரென்று அங்கு காரில் தந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், கண்ணிமைக்கும் நேரத்தில், ஆற்காடு சுரேஷை நெருங்கி, சரமாரியாக அவர் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தடுக்க முயற்சி செய்த அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை, அந்த ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அனைவரும், பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓட தொடங்கினர்.

பின்னர், அந்த மர்ம கும்பல், அந்த பகுதியில் இருந்து, எந்த வித பயமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக, காரில் ஏறி, அங்கிருந்து தப்பி சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷை, அங்கிருந்த நபர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிப்பதற்கு மூன்று தனிப்படை அமைத்து, விசாரித்து வருகிறது. பழிக்கு, பழியாக சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அவர் படுகொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு விதத்தில், தனி படை காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

ஜெயிலர், கதர் 2, OMG 2, இருந்தபோதிலும், இந்தியாவில் ரூ.150 கோடி வசூலை கடந்தது ஓப்பன்ஹைமர்..!

Sat Aug 19 , 2023
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹைமர். இந்த ஆண்டின் மிகப்பெரிய படங்களில் இதுவும் ஒன்றாகும், ஹூலிவுட்டில் நாலா வாஸூலை ஈட்டி வரு இப்படம், இந்தியாவிலும் சாதித்துள்ளது. இந்த படம் வெளியாகி ஒரு மதத்திற்கு மேல ஆகி உள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. வெளியான 15 நாட்களில் இந்தியாவில் 100 கோடியை வசூலித்தது இந்தப் படம், […]

You May Like