சின்னத்திரையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக வளம் வந்தவர் தான் யுவராஜ் நேத்ரன். இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல், வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் சீரியலில் நடித்த, தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற தீபா, தாயான பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் அண்மையில் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் தற்போது சிங்கப்பென்னே நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த தம்பதியின் மூத்த மகள் அபிநயா, சிறு வயதில் தனது தந்தையோடு சேர்ந்து, ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள்ளார். இந்நிலையில், அபிநயா கடந்த ஜூலை மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அந்த பதிவில், தனது தந்தை ஐசியூவில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
மேலும் அதில், தனது தந்தைக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்றால், அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும், மக்களின் பிரார்த்தனை தான் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கண்கலங்கி ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேத்ரன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நேத்ரன், தனது குடும்பத்துடன் தான் சந்தோசமாக இருக்கும் புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.
புற்றுநோய் பாசிட்டிவ் என தெரிந்த பிறகும் அவர் தைரியமாக தனது வாழ்க்கையை எதிர்கொண்டு, கலகலப்பான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில், கடைசியாக நவம்பர் 10-ம் தேதி தனது இளைய மகள் அஞ்சனா, தன் கையால் செய்த கோதுமை பிஸ்கட்டின் புகைப்படங்களை ரசிகர்களுடன் சந்தோஷமாக பகிர்ந்திருந்தார். தற்போது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், சினிமா துறையில் இருந்தாலும் தனது குடும்பத்திற்கு சரியான நேரத்தை செலவழித்து , தனது குடும்பத்தை மிகவும் நேசித்த இவருக்கு, இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி நடந்திருக்கக் கூடாது என கமெண்ட்டில் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்
Read more: உங்கள் குழந்தைகள் எந்த நோயும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு உணவு போதும்…