பிரபல பெங்காலி மற்றும் ஒடியா பாடகி நிர்மலா மிஸ்ரா இன்று செட்லா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 81.
பல பெங்காலி மற்றும் ஒடியா படங்களில் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமடைந்தவர் நிர்மலா மிஸ்ரா.. இந்த நிலையில், சில காலமாக வயது தொடர்பான நோய்களுடன் போராடி வந்தார். நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனினும் நிர்மலா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..
அவரின் மறைவு, பெங்காலி மற்றும் ஒடியா திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதனிடையே நிர்மலா மிஸ்ராவின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு பிரபலங்கள் மட்டுமின்றி அவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்க இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 1938 இல் பிறந்த நிர்மலா மிஸ்ரா, ஒடியா இசைக்கு வாழ்நாள் பங்களிப்பிற்காக சங்கீத் சுதாகர் பாலக்ருஷ்ண தாஸ் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..