fbpx

IPL 2024| தல தரிசனம்.!! எம்எஸ் தோனிக்கு கையில் கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை காட்டிய ரசிகர்.!! வைரல் வீடியோ.!!

IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 13 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் டேவிட் வார்னர் 54 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் 52 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. சி எஸ் கே அணியில் அதிகபட்சமாக ரகானே 45 ரன்கள் மற்றும் எம்எஸ் தோனி 16 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.

தோனிக்கு இது கடைசி ஐபிஎல்(IPL 2024) தொடராக இருக்கும் என்பதால் அவரது பேட்டிங்கை காண அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று களம் இறங்கிய தோனி 16 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தோனி கடைசி வரை போராடிய போதும் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

தற்போது தோனியின் பேட்டிங்கின் போது நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வு ஒன்று இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. தோனி பேட்டிங் செய்ய களம் இறங்கிய போது ரசிகர் ஒருவர் தனது கையில் கற்பூரத்தை கொளுத்தி தோனிக்கு தீப ஆராதனை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. தல தரிசனம் கிடைத்ததை கையில் கற்பூரம் ஏற்றி கொண்டாடிய ரசிகரின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Read More: Elon Musk | மனித குலம் முடிவுக்கு வரும் அபாயம்.!! டெஸ்லா நிறுவனர் பகிர்ந்து அதிர்ச்சி தகவல்.!!

Next Post

Election 2024 | இது புதுசா இருக்கே.!! "அண்ணாமலை என்னுடைய ரகசிய உளவாளி" - மதுரை பிரச்சாரத்தில் சீமான் பரபரப்பு பேச்சு.!!

Mon Apr 1 , 2024
Election: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்காக தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்தவர் […]

You May Like