fbpx

வேகமாக குணமடைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி – ரிஷப் பந்த்..!

உலக கிரிக்கெட் ரசிகர் பட்டாளமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் காயமடைந்த அவர், தனது உடல்நிலை குறித்த மற்றொரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். டிசம்பர் கடைசியில் அடிபட்ட அவர் இதுவரை ஏறக்குறைய 6 மாத கிரிக்கெட்டைத் தவறவிட்ட பிறகு, முழு உடற்தகுதியை நோக்கி பெரும் முன்னெடுப்புகளை எடுத்துள்ள ரிஷப் பந்த், இந்தியா நடத்த உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் தனது கம்பேக்கை நிகழ்த்த ஆர்வமாக உள்ளார். டிசம்பர் 30 அன்று ஒரு பயங்கரமான கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய டெல்லி கேபிடல்ஸ் (டிசி) கேப்டனான அவர், 2023 சீசன் முழுவதையும் இழந்தார்.

சமீபத்திய அப்டேட்டுகள்படி, பந்த் எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைந்து வருகிறார் என்று தெரிகிறது. அதோடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவர் மீண்டும் களத்திற்கு வருவதற்கான மறுவாழ்வு பயிற்சிகளையும் தொடங்குவதற்கான ஆயத்த நிலையில் இருப்பதாக தெரிகிறது. கார் விபத்துக்குப் பிறகு முதல் முறையாக ஊன்றுகோல் இல்லாமல் அவர் நடப்பது போன்ற வீடியோ சமீபத்தில் வெளிவந்தது. கடந்த மாதம் இந்தியா க்ளோவ்மேன் பகிர்ந்த அந்த வைரல் வீடியோவில், பண்ட் தனது ஊன்றுகோலை தூக்கி எறிந்தார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

விரைவாக குணமடைந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதன் மூலம் பண்ட் பிசிசிஐயை கவர்ந்ததாக தெரிகிறது. இந்த ஆண்டு ODI உலகக் கோப்பைக்கு பண்டை தயார்படுத்த பிசிசிஐ முயற்சிப்பதாக தெரகிறது. பிசியோ எஸ் ரஜினிகாந்தின் வழிகாட்டுதலின் கீழ், கீழ்-உடல் மற்றும் மேல்-உடல் இயக்கப் பயிற்சிகளை செய்து வருகிறார். ரஜினிகாந்த் கடந்த காலங்களில் பல இந்திய வீரர்களுக்கு பெருமளவு உதவியுள்ளார். அதோடு டெல்லி கேப்பிடல்ஸிலும் பணியாற்றியுள்ளார். அந்த பிரபல பிசியோ ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முரளி விஜய் போன்றவர்கள், அவர்கள் மறுவாழ்வில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு உதவியுள்ளார். என்சிஏவில் பிசியோவாக இருக்கும் துளசி ராம் யுவராஜ், மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு பண்ட் குணமடைவதை கண்காணித்து வருகிறார்.

Maha

Next Post

சினிமாவில் நடிக்க வாய்ப்பு..!! கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதியிலிருந்து வெளியேறிய மாணவி..!!

Fri Jun 16 , 2023
மாணவி ஒருவர், சினிமாவில் நடிப்பதற்காக யாரிடமும் சொல்லிக்கொள்ளமல் விடுதியை விட்டு வெளியேறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பத்தைச் சேர்ந்த மாணவி சாதனா. 20 வயதான இவர், திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கையில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பல காணொளிகளை நடித்து வெளியிட்டுள்ளார். கல்லூரி இரண்டாம் ஆண்டு […]

You May Like