மாமன்னன் படத்தில் தான் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை சாதிய மனப்பாண்மையில் கொண்டாடியது குறித்து நடிகர் ஃபகத் ஃபாசில் பதிலளித்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் ஃபகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.
வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்தார். அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடத்திருந்தார். அதில் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
ஃபகத் ஃபாசிலின் உடல்மொழி, தோற்றம் , நடிப்பு ஆகியவை எல்லா ஆதிக்க சாதியிலும் இருக்கும் அப்படியான ஒரு நபரை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்த காரணத்தினால் எல்லா ஆதிக்க சாதியினைச் சேர்ந்தவர்களும் தங்கள் சாதிக்கென இருக்கும் பாடல்களுடன் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கிவிட்டார்கள். மாமன்னன் படம் ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து இந்த போக்கு இன்னும் அதிகரித்து சமூக வலைதளங்களில் ஃபகத் ஃபாசில் வைரலாகினார்.
அவர் அளித்த பேட்டியில், “ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துதான் நடிக்கிறேன். மாமன்னன் படத்தில் ரத்னவேல் கதாபாத்திரம் ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்தது. அவன் கெட்டவனாக இருக்கும் தருணமும், அவன் பலவீனமானவனாக இருக்கும் தருணமும் அதில் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அவனுடைய இருதன்மைகளையும் புரிந்துகொண்டு ரத்தினவேலை ஒரு மனிதனாக பார்த்தார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக மட்டுமே பார்த்தது, கொண்டாடியது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாதது. அதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என பேசியிருந்தார்.