போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர்.
அப்போது ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கையை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்கள் சிலர் கொடுத்த புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார். ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில், ரசிகர்கள் தலைவா, தலைவா என கோஷம் எழுப்பினர்.
போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அவரது இல்லம் உண்டு கூடிய அனைத்து ரசிகர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கூறினார் நடிகர் ரஜினி. வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும், அனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறினார்.