முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடிக்கும் அதிகமான முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றது. நாமக்கல்லிலிருந்து தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகத் தினசரி சுமையுந்துகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோடைக்காலத்தில் முட்டை உற்பத்தி குறையும் நிலையில் நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை உயரும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்றைக்கான முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (NECC) தினசரி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Read More: தமிழகமே..! இனி சாதி பெயர் கூடாது… சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு…!