fbpx

கண்முன்னே விஷம் குடித்து விவசாயி தற்கொலை..!! கண்டுகொள்ளாமல் செல்போனில் பேசிய காவல் ஆய்வாளர்..!!

காவல் நிலையம் முன்பு விஷம் அருந்திய விவசாயி உயிரிழந்த நிலையில், அலட்சியம் காட்டிய பெண் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் குள்ளலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி. சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை, சிலர் மிரட்டி பறிக்க முயல்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி மற்றும் அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விவசாயி பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில், நிலக்கோட்டை நீதிமன்றம் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு ஆணை பிறப்பித்தும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதனால், விரத்தி அடைந்த பாண்டி கடந்த 7ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாத போலீசாரை கண்டித்து, விஷத்தை அருந்தி காவல் நிலையம் முன்பு மயங்கி விழுந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி பாண்டி, 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவசாயி பாண்டி இறந்துவிட்ட நிலையில், தற்போது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். புகார் கொடுத்தபோது வழக்கு பதிவு செய்யாமல் புகார் கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காவல் நிலையம் முன்பு விவசாயி பாண்டி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் மயங்கிய நிலையில் காவல் நிலைய வாசலில் பாண்டி அமர்ந்திருப்பதும், அதன் அருகே காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. விஷம் அருந்தி மயங்கி நிலையில், கிடக்கும் விவசாயியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காவல் ஆய்வாளர் அலட்சியம் காட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே, பாண்டி தற்கொலை வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத, காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமியை, திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஹெல்மெட்டில் மறைத்து வைத்து கல்லூரி மாணவி செய்த செயல்! கேரள போலீசார் நடவடிக்கை!

Mon Feb 13 , 2023
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை ஒன்றில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் நாய்க்குட்டியை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பனங்காட்டில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் பஷீத். அப்போது இவரது கடைக்கு தங்களது பூனையை விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்லூரி மாணவனும் மாணவியும் வந்துள்ளனர். பூனையை காணவில்லையே […]

You May Like