கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க நினைத்து கிணற்றில் குதித்த விவசாயி , மலைப்பாம்பு உடலில் சுற்றிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்சின்னசாமி . விவசாயியான இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது கிணற்றில் மலைப்பாம்பு விழுந்துள்ளது. இதை வெளியே எடுக்க பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நடராஜன் என்பவர் வரவழைக்கப்பட்டார்.
நடராஜன் பாம்பை பிடிக்க கிணற்றில் இறங்கியுள்ளார். கிணற்றில் இருந்த மலைப்பாம்பை பிடித்துவிட்டு வெளியில் வரும்பொழுது பாம்பு நடராஜின் உடலை இறுகச் சுற்றிக் கொண்டது. இதனால் நடராஜ் மீண்டும் தண்ணீரில் விழுந்தார். நீச்சலடிக்க முடியாமல் சில நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.