பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கிக் கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்குள் முடிக்க வேண்டும்.
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13-வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முதல் தவணையானது ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்குள் (பிப்ரவரி 10) முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ரூ.2,000 பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் வரவிருக்கும் தவணைப் பண பரிமாற்றத்திற்காக இ-கேஒய்சி அப்டேட்டில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இன்றைக்கும் இந்த வேலையை முடிக்காவிட்டால் பணத்திற்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.