fbpx

அடி தூள்.. தமிழக அரசு சார்பில் நெல் விதைகள் 50% மானிய விலையில்‌…! உடனே முந்திக் கொள்ளுங்கள்…!

தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்; வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை மூலம்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாரம்பரிய நெல்‌ விதைகள்‌ 2 மெட்ரிக்‌ டன்‌ 50 சதவீத மானியத்தில்‌ வழங்க அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில்‌ இருப்பில்‌ வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்‌ பாரம்பரிய நெல்‌ ரகங்களின்‌ விதை உற்பத்தியை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ கடந்த சட்டப்போவை வேளாண்மை பட்ஜெட்‌ கூட்டத்தில்‌ அறிவிக்கப்பட்டு, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ நல்‌ ஜெயராமன்‌ பாரம்பரிய நெல்‌பாதுகாப்பு இயக்கம்‌ தொடங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில்‌ பாரம்பரிய நெல்‌ரகங்களான தூயமல்லி, கருப்புக்கவுணி மற்றும்‌ சீரக சம்பா ஆகிய பாரம்பரிய நெல்‌ரகங்கள்‌ 2 டமட்ரிக்‌ டன்‌ விவசாயிகளுக்கு 50% மானிய விலையில்‌ விநியோகிப்பதற்காக அனைத்து வட்டார வேளாண்‌ விரிவாக்க மையங்களில்‌ இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அரசு விதைப்‌ பண்ணைகளில்‌ உற்பத்தி செய்யப்பட்ட விதைகள்‌ கிலோ ஒன்றுக்கு ரூ.25/-க்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள்‌ மூலம்‌ பாரம்பரிய நெல்விதைகள்‌ 50 சதவீதம்‌ மானியத்தில்‌ விநியோகம்‌ செய்ய தயார்‌ நிலையில்‌ உள்ளன. மொத்த விலையில்‌ 80சதவீதம்‌ பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும்‌, 20 சதவீதம்‌ பட்டியலின மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளுக்கும்‌ வழங்கப்படும்‌. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர்‌ ஒன்றுக்கு 10 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்‌. இதில்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ ஊராட்சிகளைச்‌ சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

பல திகிலூட்டும் சம்பவங்கள்.. இந்தியாவின் அதிகம் பயமுறுத்தும் இடம் பற்றி தெரியுமா..?

Tue Sep 13 , 2022
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான மலைகள், பசுமையான இடங்கள் மற்றும் கோவில்களைப் பார்க்க, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால், கோவில்கள், மலைகள் மற்றும் பசுமையால் அலங்கரிக்கப்பட்ட உத்தரகாண்டில் பயங்கரமான இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இது போன்ற பல மர்மமான சம்பவங்கள் இங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கு பல பயமுறுத்தும் இடங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று சம்பாவாத் மாவட்டத்தின் லோகஹாட்டில் அமைந்துள்ள முக்தி கோத்தாரி […]

You May Like