Delhi: டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை […]

PM-KISAN YOJANA: பிரதமர் மோடி(PM Modi) அறிவித்த பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 16 வது தவணை பணம் இன்று வெளியிடப்படுகிறது. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 16-வது தவணை இன்று வெளியிடப்படுகிறது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் ஒவ்வொரு வருடமும் […]

போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம். அம்பாலா காவல்துறையின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி. விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு […]

குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இலவச மின்சாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டம் (Farmers protest) நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை இவர்கள் டெல்லியை நோக்கி பயணத்தை தொடங்கினர். விவசாயிகளின் பேரணி பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் போற்றும் ஹரியானா […]

டெல்லி நோக்கி செல்வோம்” பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் […]

இந்தியாவில் வேளாண் பொருட்களின் உற்பத்தி மற்றும் தரம் உயர்ந்து வருவதற்கும், 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனமான இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் உலகளாவிய பருப்பு கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்; இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்கும், […]

பிரதமரின் நுண்ணீர் பாசனக் திட்டம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து வகையான பயிர்களுக்கும் பிரதமரின் நுண்ணீர் பாசனக் திட்டம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் குறைந்த நீரைக் கொண்டு அதிக […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். இவர்களது போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் கிராமின் பாரத் பந்த் என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் SKM ஆகியவை நாடு […]

விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை […]