fbpx

இந்த ரூல்ஸ் உங்களுக்கு தெரியுமா..? வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்க நகைகளை இந்தியாவுக்கு எடுத்து வரலாம்..?

இந்தியாவில் எவ்வளவுதான் நகைக்கடைகள் இருந்தாலும், வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள், இது துபாய் நகை, சவுதி நகை, மலேசியா நகை என்று சொல்வதை விரும்புவார்கள். வெளிநாட்டு நகை என்றால் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை. இதனால் தான், வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோர் பலர் தங்கள் குடும்பத்தினருக்காக தங்கம் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நாடுகளை பொறுத்து தங்கம் விலை மாறுபடுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் கொண்டு சென்றால் அதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சுங்கக்கட்டணத்தை கட்டாமல் தவிர்க்க தங்கத்தை மறைத்து விமானம், கப்பல் போக்குவரத்து மூலம் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இப்படி தினமும் பல கோடிக்கணக்கிலான பிடிபடுகின்றன. அதேபோல், யார் யார் எந்த அளவில் தங்கத்தை எடுத்து சென்றால் சுங்க கட்டணம் இல்லை என்ற விவரம் சிலருக்கு தெரியாமல் கூடுதல் நகையை கொண்டு சென்று விமான நிலையத்தில் அபராதத்தை கட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சுங்கக்கட்டணம் இன்றி எவ்வளவு தங்க நகையை கொண்டு செல்லலாம்? :

இதற்கு முதலில் அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும். ஆண்கள் ரூ.50,000 என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை கொண்டு வரலாம். பெண்கள் ரூ.1 லட்சம் என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை எடுத்து வரலாம். நகையாக இருந்தால் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது. அதுவே தங்க கட்டிகள், தங்க காசுகளாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேபோல் மேற்கண்ட விதிகள் வெளிநாடுகளில் வாங்கிய நகைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்தியாவில் வாங்கி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டத் தேவையில்லை. இந்த அளவு, வரையறை தாண்டி தங்கம் கொண்டு சென்றால் சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களில் சொல்லாமல் மறைத்து கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் அல்லது கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

Chella

Next Post

மக்களே உஷார்..! தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் தான் காற்று மாசு அதிகம்..! இதே போல் போனால் 2030-ல் 27 விழுக்காடு அதிகரிக்கும்..!

Wed Aug 30 , 2023
2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு என பெங்களூரு ஆய்வு மையம் தகவல். பெங்களுருவில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் சென்னை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டடங்களில் வெளியேற்றப்பட்ட மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள், கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் காற்று மாசு அதிகாமாக […]

You May Like