fbpx

விவசாயிகளே!… 7 நாட்கள் ஆகியும் இன்னும் பணம் வரவில்லையா?… மத்திய அரசு விளக்கம்!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி தொகை 7 நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லையென்றால், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணை நிதி வெளியிடப்பட்டு ஏழு நாட்கள் ஆகியுள்ளது. சிலர் அது கணக்கில் பணம் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே பணம் பெறாத விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தவறாக உள்ளிடப்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ கே ஒய் சி சரிபார்க்க வேண்டும் எனவும் தவறுகள் திருத்தப்பட்டது என்றால் அடுத்த தவணையுடன் சேர்த்து பணம் வந்து சேரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Kokila

Next Post

நோட்...! அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு...! மீறினால் நடவடிக்கை...! மாநில அரசு அதிரடி உத்தரவு...!

Fri Aug 4 , 2023
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுபாட்டு குறித்து அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவில், பள்ளியில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதை தடை செய்கிறது மற்றும் பெண் ஆசிரியர்கள் இந்திய உடைகளை அணியவும், அதிக நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண் ஆசிரியர்கள் தாடியை ஷேவ் செய்து கொண்டு பள்ளிக்கு வர வேண்டும். ஆடை […]

You May Like