விவசாயிகளே கடைசி தவணை ரூ.2,000 பெற கட்டாயம் இதை செய்ய வேண்டுமாம்..! மத்திய அரசு புதிய அறிவிப்பு..!

ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா 2,000 ரூபாயை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், கடைசி தவணைப் பணத்தை பெறுவதற்கு ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வலைதளத்தில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது மத்திய அரசின் 100% பங்களிப்புடன் பிப்ரவரி 2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளே கடைசி தவணை ரூ.2,000 பெற கட்டாயம் இதை செய்ய வேண்டுமாம்..! மத்திய அரசு புதிய அறிவிப்பு..!

இதுவரை, 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு 12-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகளும் https://www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஓ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

விவசாயிகளே கடைசி தவணை ரூ.2,000 பெற கட்டாயம் இதை செய்ய வேண்டுமாம்..! மத்திய அரசு புதிய அறிவிப்பு..!

அடுத்த 12-வது தவணைத் தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் எந்த நாட்டில்..?

Wed Aug 10 , 2022
ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எரித்திரியா அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி இருக்கும் நாடு எரித்திரியா. சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது. இந்த நாடு தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து வருகிறது. எனவே ஆண்களின் எண்ணிக்கையை விட

You May Like